வேப்பம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
வேப்பம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
தேனி
சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டியில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். வேளாண்மை துறை, வருவாய்த்துறை, மருத்துவத்துறை, சுகாதாரத்துறை என அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு தங்கள் துறையின் வழியாக பொதுமக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களை பற்றி பேசினர்.
மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச மருந்து பெட்டகத்தை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கலெக்டர் முரளிதரன் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று கொண்டார். பின்னர் தங்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
Related Tags :
Next Story