15-ந் தேதி கிராம சபை கூட்டம்


15-ந் தேதி கிராம சபை கூட்டம்
x

அனைத்து ஊராட்சிகளிலும் 15-ந் தேதி கிராம சபை கூட்டம் நடக்கிறது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகிற 15-ந்தேதி(திங்கட்கிழமை) சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதியில் மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை மற்றும் ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் சுகாதார பணிகள், குடிநீர் வசதி, வளர்ச்சிப் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட முக்கிய பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஊராட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தவறாது கலந்து கொண்டு கிராம வளர்ச்சிக்கு உதவிட வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








Next Story