கிராம ஊழியர் சங்க மாநாடு
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநாடு ஆலங்குளத்தில் நடைபெற்றது.
விருதுநகர்
ஆலங்குளம்,
விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநாடு ஆலங்குளத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு விருதுநகர் மாவட்ட கிராம ஊழியர் சங்க தலைவர் சேகர் தலைமை தாங்கினார். ஆலங்குளம் டி.என்.சி. முக்கு ரோட்டில் இருந்து கிராம ஊழியர்கள் பேரணி தொடங்கியது. இந்த பேரணி மாநாடு அரங்கினை சென்று அடைந்தது. மாநாட்டில் 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாநில தலைவர் திருமலைவாசன், மாநில துணை தலைவர் சூரியமூர்த்தி, மாநில தணிக்கையாளர் ராஜேஷ்கண்ணன் ஆகியோர் பேசினர். வெம்பக்கோட்டை தாலுகா கிராம ஊழியர் சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் கந்தசாமி, நிர்வாகிகள் கனகராஜ், கணேசன், சிவக்குமார், கருப்பசாமி, ராமுத்தாய் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் விருதுநகர் மாவட்ட பொருளாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story