கிராம ஊழியர் சங்க மாவட்ட மாநாடு


கிராம ஊழியர் சங்க மாவட்ட மாநாடு
x

சங்கராபுரத்தில் கிராம ஊழியர் சங்க மாவட்ட மாநாடு

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட மாநாடு சங்கராபுரத்தில் மாவட்ட தலைவர் கே.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் சரவணன், மாவட்ட துணை தலைவர் வெங்கடேசன், பொருளாளர் ராஜேஸ்வரி, விழுப்புரம் மாவட்ட தலைவர் லட்சுமணன், செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். மாநில தலைவர் திருமலைவாசன், துணைத்தலைவர் பாலுசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

மாநாட்டில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், இயற்கை இடர்பாடு காலங்களில் சிறப்பு படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வில்லியம்சாந்தகுமார், நிர்வாகிகள் மணிகண்டன், பாலசுப்பிரமணியன், பத்மாவதி, செம்மலை, ஜெயகண்ணன் மற்றும் சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story