கம்ப சேவை திருவிழா
வேதாரண்யம் அருகே கம்ப சேவை திருவிழா கொண்டாடப்பட்டது.
நாகப்பட்டினம்
வேதாரண்யம் அருகே தேத்தாகுடி தெற்கு, யாதவபுரத்தில் வெங்கடாஜலபதி சாமிக்கு 70-வது ஆண்டு கம்பசேவை திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இதை முன்னிட்டு தெத்தேரியில் இருந்து பக்தர்கள் புனித நீராடி கம்ப விளக்கு ஏந்தி வந்து வெங்கடாஜலபதி சன்னதியில் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து வடை மாலை, வாழைத்தார், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு படையல் இட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தா்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என சரண கோஷம் எழுப்பி வழிபாடு செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி அரிச்சந்திர புராண நாடகம் நடந்தது. விழாவில் நாளை (புதன்கிழமை) திருவிளக்கு பூஜை மற்றும் இன்னிசை நிகழ்ச்சி, பரத நாட்டியம், ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
Related Tags :
Next Story