மயிலாடுதுறை மாவட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்


மயிலாடுதுறை மாவட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
x

சுதந்திர தின விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

சீர்காழி;

சுதந்திர தின விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.

கிராம சபை கூட்டம்

75-வது சுதந்திர தின விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி தலைமை தாங்கினார். ஆணையர்கள் இளங்கோவன், அருள்மொழி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதிதேவேந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் விஜயேஸ்வரன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து வரவு- செலவு கணக்குகளும் சரிபார்க்கப்பட்டது. பின்னர் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சிப் பணிகள் தேர்வு செய்யப்பட்டன.

திட்டை ஊராட்சி

திட்டை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பெரியசாமி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சத்துணவு மேலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் விஜயகுமார், ஊராட்சி துணைத் தலைவர் விஜயராணி, ஊராட்சி செயலர் அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செம்மங்குடி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் அசோகன் தலைமையிலும், எடக்குடி வடபாதி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் அஞ்சம்மாள் தலைமையிலும், நிம்மேலி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் வசந்தி கிருபாகரன் தலைமையிலும், அகனி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் மதியழகன் , கொண்டல் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் விஜயின், மருதங்குடி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் அலெக்சாண்டர், புங்கனூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் ஜுனைதா பேகம், சட்டநாதபுரம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வரவு- செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டது. கூட்டத்தில் துணைத் தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story