கிராம கோவில் பூசாரிகள் பேரமைப்பு ஆலோசனை கூட்டம்
நாகையில் கிராம கோவில் பூசாரிகள் பேரமைப்பு ஆலோசனை கூட்டம்
நாகப்பட்டினம்:
நாகை அருகே உள்ள மஞ்சக் கொல்லை பூங்காளம்மன் கோவிலில் கிராம கோவில் பூசாரிகள் பேரமைப்பு சார்பில் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் ஏ.பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் கே.பாலசுப்பிரமணியம், மாவட்ட தலைவர் மகாலிங்கம், ஒன்றிய செயலாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள், கிராம கோவில் பூசாரிகள் பேரமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. 60 வயது முடிந்த அனைத்து பூசாரிகளும் ஓய்வூதியம் பெறுவதற்கு அரசு கேட்கும் ஆவணங்கள் தயார் செய்து சங்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தமிழக அரசு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். கிராம கோவில் பூசாரிகள் வசித்து வரும் வீட்டு மனைகளுக்கு தமிழக அரசு பட்டா வழங்க வேண்டும். கிராம கோவில் பூசாரிகளுக்கு கான்கிரீட் வீடுகள், இலவச மின்சாரம் வழங்க வேண்டும். இயற்கை மரணங்கள் ஏற்படும் போது கிராம பூசாரிகளின் வாரிசுகளுக்கு உதவித்தொகையாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.