விஷம் குடித்து கிராம நாட்டாண்மை தற்கொலை


விஷம் குடித்து கிராம நாட்டாண்மை தற்கொலை
x

கபிஸ்தலம் அருகே விஷம் குடித்து கிராம நாட்டாண்மை தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே விஷம் குடித்து கிராம நாட்டாண்மை தற்கொலை செய்து கொண்டார்.

கிராம நாட்டாண்மை

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சத்தியமங்கலம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (வயது57). விவசாயி. இவர் கிராம நாட்டாண்மையாக இருந்து வந்தார். இவருடன் அதே கிராமத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் கிராம நாட்டாண்மையாக இருந்து வந்தனர். இந்த நிலையில் கிராமத்துக்கு சொந்தமான ரூ.50 ஆயிரத்தை எடுத்து கோவிலுக்கு செலவு செய்வதாக கூறி கிராம நாட்டாண்மைகள் செலவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை கிராம மக்கள் தட்டி கேட்டதால் கிராம நாட்டாண்மைகள் 5 பேரும் ரூ.10 ஆயிரம் வீதம் தந்து ரூ.50 ஆயிரத்தை செலுத்தி விடுகிறோம் என கூறினர்.

விஷம் குடித்தார்

அதன்படி பரமசிவம் தான் வழங்க வேண்டிய ரூ.10 ஆயிரத்தை வழங்கி உள்ளார். மீதம் உள்ள நாட்டாண்மைகள் யாரும் பணம் தராததால் மனம் உடைந்த பரமசிவம் வீட்டில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். இதை கண்ட வீட்டில் இருந்தவர்கள் அவரை உடனடியாக சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த பரமசிவம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவருடைய மகன் அருள் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பு நம்பியார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story