உசிலம்பட்டியில் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்


உசிலம்பட்டியில் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்
x

உசிலம்பட்டியில் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்

மதுரை

உசிலம்பட்டி

உசிலம்பட்டி நகராட்சி பகுதிகளில் தேங்கும் குப்பைகளை வத்தலகுண்டு சாலையில் உள்ள முனீஸ்வரன் கோவில் அருகில் கொட்டப்பட்டு வருகிறது. இங்கு குப்பைகளை கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்று அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து நகர் மன்ற தலைவர் சகுந்தலா, ஆணையாளர் பாண்டித்தாய் தலைமையில் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் இங்கு கொட்டப்படும் குப்பைகளை முறையாக பிரித்து உரங்கள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குப்பைகளில் தீ வைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story