கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்


கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 21 May 2023 12:15 AM IST (Updated: 21 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி தலைவரை விடுதலை செய்யக்கோரி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசின் நிதியை நேரடியாக கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புளியந்துறை ஊராட்சி மன்ற தலைவர் நேதாஜி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நேதாஜி உள்ளிட்ட 9 ஊராட்சி மன்ற தலைவர்களை கைது செய்தனர். அதில் 8 ஊராட்சி மன்ற தலைவர்கள் அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் புளியந்துரை ஊராட்சி மன்ற தலைவர் நேதாஜியை போலீசார் கைது செய்து சீர்காழி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சீர்காழி கிளை சிறையில் அடைத்தனர். இதையடுத்து நேதாஜியை விடுதலை செய்யக்கோரி புளியந்துறை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் கேசவன் தலைமையில் கிராம மக்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் செந்தில்குமார்,துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், ஒன்றிய ஆணையர் அருள்மொழி, ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி,புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, மற்றும் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


Next Story