தலைமை ஆசிரியர் மாற்றம் கண்டித்து பள்ளியை கிராம மக்கள் முற்றுகை
தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ததை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
ஆரணி
தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ததை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
களம்பூரை அடுத்த கஸ்தம்பாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தற்போது போளூரை அடுத்த செங்குணம் பகுதியில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை கண்டித்தும், கஸ்தம்பாடி பள்ளியிலேயே தலைமை ஆசிரியராக சரவணன் பணியாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளி மேலாண்மை குழுவுடன் கிராம மக்கள் ஒன்று திரண்டு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கல்வித்துறை அதிகாரிகளை கண்டித்தும், தலைமை ஆசிரியர் சரவணன் இதே பள்ளியில் தலைமை ஆசிரியராக தொடர வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story