கிராம மக்கள் சாலை மறியல்


கிராம மக்கள் சாலை மறியல்
x

கிராம மக்கள் சாலை மறியல்

மதுரை

திருமங்கலம்

திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி அருகேயுள்ள கே.வெள்ளாகுளம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கண்மாய் கரையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குரங்கு ஒன்று இறந்துவிட்டது. கிராமமக்கள் குரங்கினை அதே பகுதியில் அடக்கம் செய்தனர். பின்னர் கிராமத்தில் கண்மாய் கரையில் குரங்கு இறந்ததால் அதற்கு பீடம் அமைத்து வழிபாடு நடத்துவது என முடிவு செய்தனர். இதற்காக வெள்ளாகுளம் கண்மாய் கரையையொட்டியுள்ள முருகன் கோவில் அருகே குரங்கு புதைக்கப்பட்ட இடத்தில் பீடம் கட்டும் பணிநடைபெற்றது. இது குறித்து அறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனுமதியின்றி பீடம் அமைக்ககூடாது என கூறி பீடம் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர். மேலும் கட்டிடபணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களையும் போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கே.வெள்ளாகுளம் கிராமமக்கள் திரண்டு கே.வெள்ளாகுளம் விலக்கில் மதுரை-நெல்லை செல்லும் நான்குவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலால் நான்குவழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பீடம் அமைக்க அனுமதி தருவதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கிராமமக்கள் கைவிட்டனர்.


Next Story