குடிநீர் கேட்டு 2 இடங்களில் கிராம மக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு 2 இடங்களில் கிராம மக்கள் சாலை மறியல்
x

மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு 2 இடங்களில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

மணப்பாறை, ஜுன்.14-

மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு 2 இடங்களில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் பிரச்சினை

மணப்பாறையை அடுத்த ரெங்ககவுண்டம்பட்டியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையாக குடிநீர் வினியோகிக்கப்படாததால் இப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது தொடர்பாக பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த இப்பகுதி மக்கள் மணப்பாறை -துவரங்குறிச்சி சாலையில் சாலைக்கரை பொய்கைப்பட்டி கடைவீதி அருகே காலிக்குடங்களுடன மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மாவட்ட கவுன்சிலர் பாலசுப்ரமணி மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்று கூறியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர்.

சாலை மறியல்

இதே போல் சமுத்திரம் வடக்குத் தெருவில் முறையான காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து சமுத்திரத்தில் உள்ள விராலிமலை சாலையில் காலிக்குடங்களுடன் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story