காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்


காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே நேற்று காலையில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்தும், முறையாக குடிநீர் வழங்க கோரியும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடிநீர் தட்டுப்பாடு

ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரன் சுந்தரலிங்கநகரில் இருந்து சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏழுகிராமங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் வீரன் சுந்தரலிங்கம் நகர் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பி்ல் குடிநீர் வழங்கப்படவில்லை.

தங்கள் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கிராம பொது மக்கள் ெதாடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், இதுவரை இக்கிராம மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக தங்கள் கிராமத்திலிருந்து மற்ற கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், தங்கள் கிராமத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

காலி குடங்களுடன் மறியல்

இந்நிலையில், நேற்று காலையில் வீரன் சுந்தரலிங்கம் நகருக்கு முறையாக குடிநீர் வழங்ககோரி நாம் தமிழர் கட்சி ஒன்றிய தலைவர் மணி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்து செல்வன் ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சேவியர் பிராங்க்ளின், பஞ்சாயத்து தலைவர் சாதிக் அலி ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

பேச்சுவார்த்தையில் பத்து நாட்களுக்குள் புதிய ஆழ்குழாய் அமைத்து வீரன்சுந்தரலிங்கம் நகருக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ேபாலீஸ் அதிகாரிகளும், பஞ்சாயத்து தலைவரும் உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் தூத்துக்குடி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story