மணல் குவாரியை டிராக்டர்களை கொண்டு மறித்து கிராமமக்கள் முற்றுகை போராட்டம்


மணல் குவாரியை டிராக்டர்களை கொண்டு மறித்து கிராமமக்கள் முற்றுகை போராட்டம்
x

மணல் குவாரியை டிராக்டர்களை கொண்டு மறித்து கிராமமக்கள் முற்றுகை போராட்டம்

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

கூடுதல் பணம் வசூல் செய்வதை கண்டித்து மணல் குவாரியை டிராக்டர்களை கொண்டு மறித்து கிராமமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணல் குவாரி

பாபநாசம் வட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள கோவிந்தநாட்டுச்சேரி கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு லாரிகளுக்கு மட்டும் பொக்லின் எந்திரம் மூலம் மணல் நிரப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

கோவிந்தநாட்டுசேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் டிராக்டரில் மணல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக கடந்த 2-ந்தேதி பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, சுரங்கவியல் துறை உதவி செயற்பொறியாளர் முருகைய்யன் மற்றும் கிராம மக்கள் சார்பில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில் 6-ந்தேதி முதல் 1 யூனிட் ரூ.2200-க்கு டிராக்டரில் மணல் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

முற்றுகை போராட்டம்

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கிராம மக்கள் டிராக்டர் மூலம் கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுக்க சென்றனர். அப்போது 1 யூனிட்டிற்கு ரூ.3500 வழங்க வேண்டும் என சுரங்கவியல் துறை அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. இதனை கண்டித்து கிராம மக்கள் கோவிந்தநாட்டுச்சேரி, கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் அரசு மணல் குவாரியை 20-க்கும் மேற்பட்ட டிராக்டர்களை கொண்டு மறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த கபிஸ்தலம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story