குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

உலகுடையாம்பட்டில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே மூக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட உலகுடையாம்பட்டு 7-வது வார்டில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க வேண்டும் மற்றும் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோரி உலகுடையாம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை 8 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லதுரை, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, லோகேஸ்வரன், ஜெயமணி ஆகியோர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சங்கராபுரம்-ராவுத்தநல்லூர் செல்லும் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story