குளத்தில் போட்டி போட்டு மீன் பிடித்த கிராம மக்கள்
கோபால்பட்டி அருகே குளத்தில் இறங்கி கிராம மக்கள் போட்டி போட்டு மீன் பிடித்தனர்.
திண்டுக்கல்
கோபால்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டியில் சப்பட்டை குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்துவது என்று ஊர் சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மீன்பிடி திருவிழா நடந்தது. அதில் நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி, செங்குறிச்சி, சிறுகுடி மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு குளத்தில் இறங்கி ஊத்த கூடை போன்றவற்றை பயன்படுத்தி மீன்களை பிடித்தனர்.
இதில் ஜிலேபி, விரா, பாறை, கட்லா உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் பிடிபட்டன. அவை ஒரு கிலோ முதல் 5 கிலோ வரை இருந்தது. பின்னர் அவர்கள் அந்த மீன்களை சமையல் செய்து சாப்பிடுவதற்காக மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
Related Tags :
Next Story