பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மதியம் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை திடீரென்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவா்கள் கூறுகையில், சாத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர், 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு பணி வழங்குவதாகவும், பணியாளர்களை தரக்குறைவாக பேசுவதாகவும், மேலும் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே முறைகேட்டில் ஈடுபடும் ஊராட்சி மன்ற தலைவர் மீது கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். பின்னர், அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் இது தொடர்பாக மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.


Next Story