சேக்கிபட்டியில் இறந்த கோவில் காளைக்கு கிராமமக்கள் மரியாதை
சேக்கிபட்டியில் இறந்த கோவில் காளைக்கு கிராமமக்கள் மரியாதை செய்யப்பட்டது
மதுரை
மேலூர்,
மேலூர் அருகே உள்ள சேக்கிபட்டியில் கிராம பொதுமக்கள் கோவில் காளை வளர்த்து வந்தனர். அலங்கா நல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுகளில் இந்த காளை பரிசுகள் பெற்று வந்தது. சேக்கிபட்டி கிராம மக்கள் தங்களது வீட்டில் ஒருவர் போல அந்த கோவில் காளையை வளர்த்து வந்தனர். சிறுவர்கள், சிறுமியர்கள் முதல் அனைவரிடமும் அன்பாக பழகிவந்த அந்த கோவில் காளை திடீரென உடல் நல குறைவால் இறந்துபோனது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் கண்ணீர் விட்டு அழுதனர். கிராமமே சோகத்தில் மூழ்கியது. சேக்கிபட்டியில் வசிக்கும் அனைவரும் தங்கள் பணிகளை கைவிட்டு ஊர் கட்டுப் பாட்டுடன் ஒன்று கூடி பொது இடத்தில் கோவில் காளைக்கு மாலைகள், வேஷ்டி துண்டுகளை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோவில்காளை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story