இலவச வீட்டுமனை கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


இலவச வீட்டுமனை கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
x

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

அரியலூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். இதில் கோவிந்தபுத்தூர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அளித்த மனுவில்,

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்துக்கான பயனாளிகள் தேர்வு நடவடிக்கைகள், எதையும் தெரிவிக்காமல் 100 நாள் பணியாளர்களிடம் கையெழுத்து பெறுவது, கிராம சபை கூட்டம் நடத்துவது, வரவு செலவுகள் என்பன உள்ளிட்ட நடவடிக்கைளை துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்களிடம் தெரிவிக்காமல் செயல்படுத்தி வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் இந்த மனுக்களை பரிசீலித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறுமை கோட்டிற்கு கீழ்...

ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழமாதேவி அமிர்தராயன்கோட்டை கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளவில்லை. மேலும் கிராமத்தின் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பம்பத்தை அகற்றக்கோரி ஊராட்சியில் பல்வேறு முறை தீர்மானம் நிறைவேற்ற சொல்லியும் இதுநாள் வரை ஊராட்சி மன்ற தலைவர் நிறைவேற்ற வில்லை. மேலும் இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்களுக்கு, மின்கம்பம் இடையூறாக அமைந்தது எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். தா.பழூர் அருகே உள்ள சுண்டப்பள்ளம் பகுதி மக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நாங்கள் போதிய இடவசதி இல்லாமல் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக வீடோ, நிலமோ இல்லை. எனவே எங்களின் குடும்ப நலன் கருதி, வறுமையில் சிக்கி தவித்து வரும் எங்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

தினக்கூலி

அரசின் வழிகாட்டுதலை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் மிகக்குறைவான தினக்கூலியாக ரூ.307 என அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளதை மறுபரிசீலனை செய்து தினக்கூலியை முறைப்படுத்தி உயர்த்தி வழங்கிட வேண்டுமாறு உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளன மாநில செயலாளரும், உள்ளாட்சி ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளருமான தண்டபானி மாவட்ட கலெக்டரை சந்தித்து ஆவணங்கள் அடங்கிய மனு அளித்தனர். தொடர்ந்து ஏராளமானவர்கள் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story