விருத்தாசலம் அருகே சாலைப்பணியை விரைந்து முடிக்கக்கோரி கிராம மக்கள் மறியல்
விருத்தாசலம் அருகே சாலைப்பணியை விரைந்து முடிக்கக்கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
கடலூர்
கம்மாபுரம்,
விருத்தாசலம் அடுத்த கார்குடல் இந்திராநகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக இருந்தது. இதையடுத்து சாலை சீரமைக்கும் பணி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் இதுவரை இப்பணிகள் முடிவடையாமல் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் கார்குடல் கிராமத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story