மத்திய- மாநில அரசுகளை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என வெள்ளையன் தெரிவித்துள்ளார்


மத்திய- மாநில அரசுகளை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என வெள்ளையன் தெரிவித்துள்ளார்
x

அந்நிய முதலீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

உடன்குடி:

அந்நிய முதலீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

சங்க ஆண்டு விழா

உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 41-வது ஆண்டு விழா மற்றும் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர் தேர்தல் உடன்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர்ரவி தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர் கந்தன், துணைத் தலைவர் சேக் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ண மந்திரம் வரவேற்றார். செயலாளர்வேல்ராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் சுந்தர் சங்க வரவு செலவு வாசித்தார்.

போராட்டம்

கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு பேசுகையில்,

தமிழ்நாடு வியாபாரம் தற்போது அந்நிய முதலீட்டில் சிக்கி தவிக்கிறது. தமிழக வியாபாரிகளிடம் தற்போது போராட்ட குணம்குறைந்து விட்டது. ஜி.எஸ்.டி வரியை கொண்டுவந்த மத்திய, மாநில அரசுகள் உணவு பொருளான அரிசிக்கும் ஜி.எஸ்.டி. வரி போட்டு உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும், என்றார்.

கலந்து கொண்டவர்கள்

இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் விநாயமூர்த்தி, மாவட்ட செயலாளர் செந்தமிழ் செல்வன், மாவட்ட பொருளாளர் பொன்ராஜ், திருச்செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் துரைசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உடன்குடி வாரச்சந்தையை தினசரி சந்தையாக மாற்ற வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

துணைச் செயலாளர் ராஜா நன்றி கூறினார்.


Next Story