விழுப்புரம் விஷ சாராய சம்பவம் - முக்கிய குற்றவாளி சென்னையில் கைது
விழுப்புரம் விஷ சாராய சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
தமிழகத்தில் இதுவரை விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இதுவரை 14 பேரும், செங்கல்பட்டில் 8 பெரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், விழுப்புரம், செங்கல்பட்டு விஷச்சாராய வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். முதலமைச்சர் அறிவிப்பை அடுத்து வழக்குகளை மாற்றி டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தநிலையில், சென்னை அருகே மதுரவாயல் கெமிக்கல் ஆலை உரிமையாளர் இளையநம்பியை கைது செய்தது காவல்துறை. 1,000 லிட்டர் மெத்தனாலை சாராய வியாபாரிகளுக்கு விற்றது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
Related Tags :
Next Story