விழுப்புரம் தொழிலாளி துபாயில் சாவு


விழுப்புரம் தொழிலாளி துபாயில் சாவு
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் தொழிலாளி துபாயில் இறந்தாா். அவரது உடலை மீட்டுத்தரக்கோரி குடும்பத்தினர் மனு கொடுத்தனா்.

விழுப்புரம்

விழுப்புரம்;

கோலியனூர் ஒன்றியம் செங்காடு கிராமத்தை சேர்ந்த ஜோசப் தமிழரசன் மனைவி மரிஎழிலரசி (வயது 32) என்பவர் நேற்று தனது 2 குழந்தைகள் மற்றும் மாமனார் அருமைநாதன், மாமியார் சம்மணசுமேரி உள்ளிட்ட குடும்பத்தினருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் ஜோசப்தமிழரசன் (35) கடந்த 3 ஆண்டுகளாக துபாய் நாட்டில் அபுதாபியில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஜெனரல் ஹெல்பராக பணியாற்றி வந்தார். அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் துபாய் சென்றார். இந்த சூழலில் நேற்று முன்தினம் காலை எனது கணவர் ஜோசப் தமிழரசன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அங்கிருந்து தகவல் தெரிவித்தனர். இதைக்கேட்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம். எனவே எனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் மோகன், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Next Story