விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு


விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
x
தினத்தந்தி 3 Sept 2023 12:15 AM IST (Updated: 3 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு நடந்துள்ளது.

கடலூர்

விருத்தாசலம்:

விருத்தாசலம் எம்.ஆர்.கே. நகரில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பூசாரி பூஜை முடிந்த பிறகு, கோவிலை பூட்டி விட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை கோவில் இரும்புக்கதவு அருகே உண்டியல் உடைக்கப்பட்டு, அதன் அருகில் சில்லறை காசுகள் சிதறி கிடந்தன. இதை பார்த்து கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனே விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், திருட்டு நடந்த கோவிலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

விசாரணையில், நேற்று முன்தினம் இரவு கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள் கோவில் இரும்புக்கதவு பூட்டை உடைத்தால் சத்தம் கேட்டு மாட்டிக்கொள்வோம் என நினைத்து, கோவிலை சுத்தம் செய்ய வைத்திருந்த மாப் மூலம் உண்டியலை இரும்புக்கதவு அருகே இழுத்துள்ளனர்.

பின்னர், உண்டியலை உடைத்து, அதில் இருந்த காணிக்கை பணத்தை நூதன முறையில் திருடிச்சென்றது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story