தேர்தல் விதிமுறைகளை மீறியகவுன்சிலர் உள்பட 4 பேர் மீது வழக்கு


தேர்தல் விதிமுறைகளை மீறியகவுன்சிலர் உள்பட   4 பேர் மீது வழக்கு
x

பேர் மீது வழக்கு

ஈரோடு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி, தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. பறக்கும் படை அதிகாரிகள் ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி முருகேசன் தலைமையில் அதிகாரிகள் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கருங்கல்பாளையம் பகுதி தி.மு.க. செயலாளர் குமார வடிவேல், 6-வது வார்டு கவுன்சிலர் தமிழ் பிரியன் ஆகியோர் முன்னிலையில் 20 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி டிரம்ஸ் அடித்தும், பட்டாசு வெடித்தும் உள்ளனர். இதனால் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கருங்கல்பாளையம் போலீசார் குமாரவடிவேல், தமிழ் பிரியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறிய கருங்கல்பாளையம் பகுதி அ.ம.மு.க. செயலாளர் பாலமுருகன், பி.பி.அக்ரஹாரம் பகுதி அ.ம.மு.க. செயலாளர் ஷாஜகான் ஆகியோர் மீதும் கருங்கல்பாளையம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story