பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்


பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் திட்டத்தின் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று காலை நடந்தது. பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் குன்னம் ராஜேந்திரன், மகளிர் திட்ட இயக்குனர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த ஊர்வலம் வெங்கடேசபுரம் வழியாக சென்று ரோவர் வளைவில் நிறைவடைந்தது. முன்னதாக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.


Next Story