வைரஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரி சார்பில் நடந்த வைரஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை நகர் மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் அரசு அறிவியல் மற்றும் கலை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்துக்கு நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் நந்தினி முன்னிலை வகித்தார்., கல்லூரி முதல்வர் மலர்மதி தலைமை தாங்கினார்.நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் 100 பேர் கலந்து கொண்டு இந்த ஊர்வலம், அண்ணாசாலையில் இருந்து புறப்பட்டு புதிய பஸ் நிலையம் வரை சென்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்டு மாணவர்கள்,இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இந்த ஊர்வலத்தில் வேளூர் ஊராட்சி தலைவர் கலாராணி ரவிச்சந்திரன், பேராசிரியர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.