விருபாட்சீஸ்வரர் கோவில் நிலம் மீட்பு


விருபாட்சீஸ்வரர் கோவில் நிலம் மீட்பு
x

சம்புவராயநல்லூர் கிராமத்தில் விருபாட்சீஸ்வரர் கோவில் நிலம் மீட்கப்பட்டது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

சந்தவாசல் அருகே சம்புவராயநல்லூர் கிராமத்தில் விருபாட்சீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு படவேடு ரேணுகாம்பாள் கோவில் நிர்வாக அலுவலர் சிவஞானம் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.

இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஏலம் எடுக்கும் குத்தகைதாரர்கள் குத்தகை பணம் செலுத்தாமல் உள்ளதால், செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் அலுவலர்கள் ேகாவில் நிலங்களை மீட்டு, இந்து சமய அறநிலையத்துறையின் இடம் என அங்கு அறிவிப்பு பலகை வைத்தனர்.

திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் க.பெ.அசோக்குமார் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி ஆலோசனைப்படி, தாசில்தார் ராம்பிரபு மற்றும் குழுவினர் இப்பணிகளை செய்தனர்.


Next Story