சப்த கன்னிமார் கோவிலில் விசாக விழா


சப்த கன்னிமார் கோவிலில் விசாக விழா
x

சப்த கன்னிமார் கோவிலில் விசாக விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

மதுரை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் சப்த கன்னிமார் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சுமார் 5 அடி நீளமுள்ள ஒரே கல்லில் 7 கன்னிமார்களின் உருவங்கள்அமைந்துள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் பவுர்ணமி நாளில் வைகாசி விசாக விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விசாக விழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனையொட்டி சப்தகன்னிமாருக்கு மாலை 4 மணியிலிருந்து இரவு 7 மணிவரை 3 மணி நேரம் பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. மேலும் சப்த கன்னிமார்களுக்கு தனித்தனி கண்மலர் சூடி, மலர் கீரிடம் வைத்து மலர்களால் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் வாழைப்பழங்கள் படைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினார்கள். விழாவின் விசேஷ நிகழ்ச்சியாக வருகிற 13-ந்தேதி பொங்கல் விழா நடக்கிறது.


Next Story