விஷ்ணு விஷால் படத்தின் புதிய அப்டேட்


விஷ்ணு விஷால் படத்தின் புதிய அப்டேட்
x
தினத்தந்தி 24 Nov 2022 3:32 PM GMT (Updated: 2022-11-24T21:03:31+05:30)

பாடலை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது.

'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடலான 'சல் சக்கா' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் தமன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த பாடலை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 'கட்டா குஸ்தி' திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story