விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் கைது


விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் கைது
x

விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூரில் உள்ள புனித லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தையும், ஆர்.சி. பள்ளிகளின் தாளாளருமான டோமினிக் சாவியோ, அரியலூர் நகர போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், விசுவ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த முத்துவேல் என்பவர், என் மீது கற்பழிப்பு, வன்கொடுமை போன்ற குற்றங்களை சுமத்தி என்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்கிறார். இதனால் இரு சமுதாய மக்களிடையே கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். அதன்பேரில், விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் முத்துவேல் மீது மதக்கலவரத்தை தூண்டுதல், ஆபாசமாக பேசுதல், மிரட்டி பணம் பறிப்பது, மக்களை திசை திருப்புவது உள்ளிட்ட 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story