கண்தான விழிப்புணர்வு பேரணி


கண்தான விழிப்புணர்வு பேரணி
x

பாவூர்சத்திரத்தில் கண்தான விழிப்புணர்வு பேரணி நடந்தது

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் கண்தான விழிப்புணர்வு குழு, பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரவிந்த் கண் மருத்துவமனை ஆலோசகர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பரமசிவன், முருகேஷ், மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனர், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவர் கே.ஆர்.பி.இளங்கோ தொகுத்து வழங்கினார். கண் தான விழிப்புணர்வு குழு தலைவர் அருணாச்சலம் வரவேற்றார். பாவூர்சத்திரம் சுசிலா மருத்துவமனை டாக்டர் எஸ். குணசேகரன் பேரணியை தொடங்கி வைத்தார். குரு பாராமெடிக்கல் நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் அப்போலா மிட் ஸ்கில்ஸ் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் அனுஷா, மாதுரி, ஆபா, கண்தான விழிப்புணர்வு குழு கவுரவ ஆலோசகர் ஜெயச்சந்திரன் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை கண் வங்கி ஒருங்கிணைப்பாளர் சாரதா, கண்தான விழிப்புணர்வு குழு துணைத்தலைவர் முருகன், முன்னாள் செயலாளர் ஆனந்த், கலைச்செல்வன், சங்கரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.


Next Story