தஞ்சைக்கு, இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை


தஞ்சைக்கு, இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை
x

தஞ்சைக்கு இன்று வரும் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

தஞ்சாவூர்


தஞ்சைக்கு இன்று வரும் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

அமைச்சர் உதயநிதி

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக தஞ்சைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வருகிறார். அவர் தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் மறைந்தமுன்னாள் அமைச்சர் உபயதுல்லா படத்தினை திறந்து வைக்கிாறர்.

பின்னர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கிற்கு சென்று அங்கு நடைபெறும்பணிகளை பார்வையிடுகிறார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைக்கிறார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள 2 கையுந்து பந்து தளங்கள், 1.1 கி.மீ. தொலைவுள்ள நடைப்பயிற்சி பாதை, நுழைவுவாயில் வளைவு ஆகியவற்றையும் திறந்து வைக்கிறார்..

ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பு

மாலை 5 மணிக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் துறை சார்ந்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி மன்ற பிரதிகள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.


Related Tags :
Next Story