விஸ்வேஸ்வர சாமி, வீரராகவப் பெருமாள் கோவில் தேர்த்திருவிழா
விஸ்வேஸ்வர சாமி, வீரராகவப் பெருமாள் கோவில் தேர்த்திருவிழா
திருப்பூர்
திருப்பூர் மாநகரில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் விஸ்வேஸ்வர சாமி, வீரராகவப் பெருமாள் கோவில்களின் வைகாசி விசாக தேர்த்திருவிழா வருந்தோறும் கோலாகமாக நடைபெறுவது வழக்கம். அவ்வாறு இந்த வருடம் தேர்த்திருவிழா ஜூன் 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதற்காக கோவிலில் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக 2 தேர்களிலும் சாரம் கட்டப்பட்டுள்ளது. நாளை மறுநாள் காலை மகுடபூஜையுடன் தேரை அலங்கரிக்கும் பணியும், செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு பூஜையும், கிராம சாந்தியும் நடக்கிறது. இந்த வருடம் ேதர்களுக்கு புதிய வடக்கயிறுகளும், துணிகளும் அமைக்கப்படுகிறது. 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்குகிறது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் மண்டப கட்டளை பூஜைகள் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் தனித்தனி வாகனங்களில் இருவேளையும் (ரிஷபம், பூதம், ஆதிசேஷன், கற்ப விருட்சம், காமதேனு, அதிகாரநந்தி, குதிரை, சிம்மம், யானை, கைலாசம், கருடன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில்) திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். தோ்த்திருவிழாவையொட்டி தினமும் கலைநிகழ்ச்சிகளும், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. தோ்த்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்து வருகின்றனர்.