விவேகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி


விவேகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
x

விவேகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் விவேகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது. அதேபோல் இந்த வருடமும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவி சொர்ணராகினி வணிகவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேசன் மற்றும் மாணவி ஹரிலெட்சுமி பயாலஜி பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை தேடி தந்துள்ளனர்.

இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாணவிகள் தர்ஷினி 477 மதிப்பெண்களும், பவதாரினி 475 மதிப்பெண்களும், குணப்பிரியா 473 மதிப்பெண்களும் பெற்று பள்ளியின் புகழை பறைசாற்றி உள்ளனர். சிறப்பிடம் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்த அனைத்து மாணவர்களையும் பள்ளியின் நிர்வாக இயக்குனர் அருண்பிரசாத், தாளாளர் வெல்கம் மோகன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்துக்கள் கூறி பாராட்டினர். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் வெற்றி கண்டு சாதனை படைத்து வரும் விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தற்போது பிரிகேஜி முதல் 11-ம் வகுப்பு வரையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.


Next Story