விளாங்குடி செல்லியம்மன் கோவில் தேரோட்டம்


விளாங்குடி செல்லியம்மன் கோவில் தேரோட்டம்
x

விளாங்குடி செல்லியம்மன் கோவில் தேரோட்டம்

தஞ்சாவூர்

திருவையாறை அடுத்த விளாங்குடி கிராமத்தில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா 10 நாட்களுக்கு ஆண்டுதோறும் நடைபெறும். பல ஆண்டுகளுக்கு முன்பு தேர் சிதிலமடைந்ததால் ஓடாமல் இருந்தது. பின்னர் புதிய தேர் செய்யப்பட்டு கடந்த மாதம் வெள்ளோட்டம் நடைபெற்றது.

விழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. தேரில் செல்லியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதல் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக வந்து நிலையை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து வாணவேடிக்கை, சிறப்பு இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது. இன்று(வியாழக்கிழமை) செல்லியம்மன் சிறப்பு அலங்காரத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதற்கான

ஏற்பாடுகளை தக்கார் சக்திவேல், ஆய்வாளர் குணசுந்தரி, பிரம்மசிர கண்டீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் பிருந்தா தேவி மற்றும் பலர் செய்து இருந்தனர்.


Next Story