விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்சித்திரை திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சிநடந்தது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
விளாத்திகுளத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா வருகின்ற 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருவிழாவின் தொடக்க விழாவாக நேற்று காலையில் கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு கோவிலில் அதிகாலையில் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து திருநாட்கால் நடப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story