விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்


விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர்  கோவிலில் ஆனி திருமஞ்சனம்
x

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் நடைபெற்றது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு நடராஜருக்கு சந்தனம், மஞ்சள், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல வகையான பொருட்களால் ஆனி திருமஞ்சன சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வில்வ இலை, செவ்வரளி மற்றும் செம்பருத்தி உள்ளிட்ட மலர்களால் அலங்காரம் ெசய்யப்பட்டு நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை காட்டப்பட்டது. இந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை தரிசனம் செய்தனர்.


Next Story