விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கொரோனா தொற்று ஒழிந்து உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டி சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் விளாத்திகுளம் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி சன்னதி முன்பாக நீண்ட வரிசையில் அமர்ந்து குத்துவிளக்கேற்றி பூ, பழம், தேங்காய் மற்றும் பொங்கல் ஆகியவற்றை கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். மேலும், விவசாயம் செழித்து மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக மீனாட்சி அம்பாளுக்கு பச்சைநிற பட்டு சாற்றப்பட்டு அலங்கார தீபாரதனையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடி மாதத்தில் வருகின்ற முதல் வெள்ளிக்கிழமை என்பதால் நேற்று ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்றனர்
Related Tags :
Next Story