வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x

பாளையங்கோட்டையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி

'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளையொட்டி, பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான நுழைவு வாயிலில் உள்ள அவரது உருவச்சிலைக்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து வ.உ.சி. சிலைக்கு மேற்கூரை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மாநகராட்சி மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், மகேசுவரி, பாளையங்கோட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வேலன்குளம் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையிலும் பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலைராஜா, ஏ.எல்.எஸ்.லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சைவ வேளாளர் பேரவை தலைவர் புளியரை ராஜா, டாக்டர் அருணாசலம், நரேயன், பாக்கியராஜ் உள்ளிட்டவர்களும், சைவ வேளாளர் சங்க மாவட்ட தலைவர் உலகநாதன், செயலாளர் மாரியப்பபிள்ளை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் சைவ வேளாளர் கல்வி மற்றும் சமூகநல அறக்கட்டளை சார்பில், வி.எம்.சத்திரத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு சங்க தலைவர் செந்தில் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. செயலாளர் கந்தகுமார், பொருளாளர் உலகநாதன், டாக்டர் நந்தகோபால், சோமு, கல்யாணசுந்தரம், ஆறுமுகம், தெய்வநாயகம், ஸ்ரீபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை தெற்கு பஜார் சைவ வேளாளர் சங்கம் சார்பில் ஐகிரவுண்டு சாலையில் மகராஜபிள்ளை நினைவு நூலகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில் ஆறுமுகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சங்க தலைவர் ராஜமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story