வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x

நெல்லை எழுச்சிநாளையொட்டி வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 13-ந் தேதி நெல்லை எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு நெல்லையில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி. மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மக்கள் தொடர்பு அலுவலர் ஆறுமுகச்செல்வி, எழுத்தாளர்கள் நாறும்புநாதன், கிருஷி, சைவ வேளாளர் சங்க தலைவர் ஜெகதீசன் பிள்ளை பொருளாளர் முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

* இதேபோல் வ.உ.சி. இலக்கிய மாமன்றத்தினர் தலைவர் புளியரை எஸ்.ராஜா தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மன்ற பொதுச்செயலாளர் கோ.கணபதி சுப்பிரமணியன், மீனாட்சிபுரம் கிளை நூலகர் அகிலன் முத்துக்குமார், வ.உ.சி. மணிமண்டப நூலகர் காந்திமதி, ஓய்வு பெற்ற உதவி கலெக்டர் தியாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Next Story