வ.உ.சி. உருவச்சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை


வ.உ.சி. உருவச்சிலைக்கு   அமைச்சர்  அனிதா ராதாகிருஷ்ணன்   மரியாதை
x

ஓட்டப்பிடாரத்தில் அரசு சார்பில் நடந்த பிறந்தநாள் விழாவில் வ.உ.சி. உருவச்சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்;

ஓட்டப்பிடாரத்தில் அரசு சார்பில் நடந்த வ.உ.சி. பிறந்தநாள் விழாவில், அவரது உருவச்சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வ.உ.சி. பிறந்தநாள் விழா

ஓட்டப்பிடாரத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாள் விழா அரசு சார்பில் அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வ.உ.சி. பிறந்த இல்லத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், எம்எல்ஏக்கள் எம்.சி.சண்முகையா, மார்க்கண்டேயன், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், யூனியன் துணை தலைவர் காசிவிஸ்வநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது வ.உ.சிதம்பரனார் இல்லத்தில் உள்ள அவரது வாழ்க்கை வரலாற்றை எடுத்து கூறும் புகை படங்களை அமைச்சர் பார்வையிட்டார். தொடர்ந்து 30 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, 11 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி ஓய்வூதியமும் ஆக 41 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 32ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி கலெக்டர் மஹாலட்சுமி, ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், யூனியன் ஆணையாளர் வெங்கடாசலம், கூடுதல் ஆணையாளர் பாண்டிராஜன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து வ.உ.சிதம்பரனார் கொள்ளு பேத்தி செல்விக்கு அரசு சார்பில் அமைச்சர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Next Story