வ.உ.சி. நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள்


வ.உ.சி. நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
x

திருச்செந்தூரில் வ.உ.சி. நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சபாபதிபுரம் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வ.உ.சி. நற்பணி மன்றத்தின் சார்பாக சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. வ.உ.சி. நற்பணி மன்ற நிறுவனர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்க தலைவர் ஆனந்தராமச்சந்திரன், செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் பொன்முருகேசன், தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் லெட்சுமணன், செயலாளர் பாலன், ஓய்வு பெற்ற வேளாண்மைத்துறை அலுவலர் உலகநாதன், நகராட்சி கவுன்சிலர் சோமசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க மாநில மகளிரணி செயலாளர் பேராசிரியை சொர்ணலதா ஆகியோர் கலந்துகொண்டு ஏழை பெண்களுக்கு தையல் எந்திரங்கள், கிரைண்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மேலும், கடந்த கல்வியாண்டில் சிறப்பிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை, நற்பணி மன்ற ஆலோசகர் கார்க்கி தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில், திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், சைவ வேளாளர் இளைஞர் பேரவை நிர்வாகிகள், ஆத்தூர், காயல்பட்டினம் சைவ வேளாளர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை வ.உ.சி நற்பணி மன்ற செயலாளர் சுந்தர், துணை தலைவர் தீர்த்தாரப்பன், பொருளாளர் நமச்சிவாயம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். முடிவில், துர்கா நன்றி கூறினார்.


Next Story