கூடலூரில் மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டும் பயிற்சி


கூடலூரில் மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டும் பயிற்சி
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டும் பயிற்சி

நீலகிரி

கூடலூர்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக சார்பில் கூடலூர் தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஐ.டி.ஐ மாணவர்களுக்கான தொழில் நெறி வழிகாட்டும் பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி நிலைய முதல்வர் ஷாஜி எம் ஜார்ஜ் தலைமை தாங்கினார். ஆசிரியர் செல்வகுமார் வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத்தின் தொழில் நெறி வழிகாட்டும் அலுவலர் கஸ்தூரி தொழிற்பயிற்சி நிலைய மாணவ- மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு குறித்து சிறப்பு பயிற்சி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தொழில் நெறி வழிகாட்டும் அலுவலர் கஸ்தூரி மாணவர்களிடம் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளிலுள்ள வேலைவாய்ப்புகள் பற்றியும் தொழிற் திறன் பற்றியும் விளக்கினார். முடிவில் ஆசிரியை அம்மினி நன்றி கூறினார்.


Next Story