வாணியம்பாடியில் ரூ.34½ கோடியில் தொழிற் பயிற்சி நிலையம்


வாணியம்பாடியில் ரூ.34½ கோடியில் தொழிற் பயிற்சி நிலையம்
x

வாணியம்பாடியில் ரூ.34½ கோடியில் தொழிற் பயிற்சி நிலையத்தை முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வேப்பமரசாலை என்ற இடத்தில் ரூ.34 கோடியே 65 லட்சத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிகாட்சி மூலம் திறந்துவைத்தார். அதைத்தொடர்ந்து தொழிற்பயிற்சி மையத்தில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஜோலார்பேட்டை தொகுதி க.தேவராஜி எம்.எல்.ஏ. ஆகியோர் குத்து விளக்கேற்றி, இனிப்பு வழங்கினர்.

நிகழ்ச்சியில் ஆலங்காயம் ஒன்றியக்குழு தலைவர் சங்கீதா பாரி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சதாசிவம், பிரித்தா பழனி, கங்காதரன், வசந்திஅருள்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக வாணியம்பாடி தொகுதி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொழிற் பயிற்சி நிலையத்தை பார்வையிட்டார். அப்போது அங்கு நடத்தப்படும் வகுப்புகள் குறித்தும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள எந்திரங்களின் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். அவருடன் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, சிவானந்தம், ராமசாமி, செல்வராஜ், சரவணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

முடிவில் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சீனிவாசன் நன்றி கூறினார்.


Next Story