தொழிற் பழகுனர் பயிற்சி சேர்க்கை முகாம்


தொழிற் பழகுனர் பயிற்சி சேர்க்கை முகாம்
x
தினத்தந்தி 8 Jun 2023 12:15 AM IST (Updated: 8 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழிற்பழகுனர் பயிற்சி சேர்க்கை முகாம் வருகிற 12-ந்தேதி நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழிற்பழகுனர் பயிற்சி சேர்க்கை முகாம் வருகிற 12-ந்தேதி நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழிற்பழகுனர் பயிற்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய தொழிற்பழகுனர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தொழிற்பழகுனர் பயிற்சி சேர்க்கை முகாம் மயிலாடுதுறை மூவலூர் ஏழுமலையான் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 12-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.

இந்த முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஆவின் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுனர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ. பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

உதவித்தொகை

மேலும் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் டிகிரி கல்வித்தகுதி உடையவர்களை நேரடியாக தொழிற்சாலைகளில் புதிய பழகுனராக சேர்த்து 3 முதல் 6 மாதகால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை தொழிற்பழகுனர் பயிற்சியும் பெற்று, தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் பெறலாம்.

இந்த தொழிற்பழகுனர் பயிற்சிக்கு உதவித்தொகை ரூ.7 ஆயிரம் நிறுவனத்தால் வழங்கப்படும். இச்சான்றிதழ் பெறுவதன் மூலமாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இந்திய அளவிலும், அயல்நாடுகளிலும் பணிப்புரிந்திட பயனுள்ளதாக அமையும்.

அரிய வாய்ப்பு

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு உதவி இயக்குநர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மயிலாடுதுறை. 04362-278222 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9442215972 என்ற கைப்பேசி எண்ணிே்லா தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story