சிறுவர்களுக்கான கைப்பந்து போட்டி
சேலம் மாநகர போலீஸ் சார்பில் சிறுவர்களுக்கான கைப்பந்து போட்டி நடந்தது.
சேலம்
சேலம் மாநகர போலீஸ் சிறுவர் மன்றம் சார்பில் சிறுவர்களுக்கான கைப்பந்து போட்டி மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் செவ்வாய்ப்பேட்டை- கன்னங்குறிச்சி அணிகள் மோதின. இதில் 30-25 என்ற புள்ளிக்கணக்கில் செவ்வாய்ப்பேட்டை அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமை தாங்கி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர்கள் லாவண்யா, கவுதம் கோயல், கூடுதல் துணை கமிஷனர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸ் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story