குரும்பூர் அருகே கைப்பந்து போட்டி
குரும்பூர் அருகே கைப்பந்து போட்டி நடைபெற்றது.
தென்திருப்பேரை:
குரும்பூர் அருகே வெள்ளகோவிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் தென்மாவட்டத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
இதில் கூடுதாழை ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் முதல் பரிசையும், கானம் கஸ்பா அணியினர் இரண்டாம் பரிசையும், ராமநாடு அணியினர் மூன்றாம் பரிசையும், வெள்ளகோவில் இளைஞர் அணியினர் நான்காம் பரிசையும் தட்டி சென்றனர். இந்த நிகழ்ச்சிக்கு சுகந்தலை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் சமூக நலத்துறை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கினார். ஆழ்வை வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி, முன்னாள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கருவேல்ராஜ், ராஜேஷ், அருண் சங்கர் உட்பட வெள்ளக்கோவில் இளைஞர்கள் செய்திருந்தனர்.
----