சிறப்பு சுருக்க திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில் மேஷ்ராம் பேச்சு
சிறப்பு சுருக்க திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில் மேஷ்ராம் பேசினார்.
சிறப்பு சுருக்க திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில் மேஷ்ராம் பேசினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல்களுக்கான சிறப்பு சுருக்கத்திருத்தம், தொடர்பான திருத்த நடவடிக்கைகளை மேற்பார்வையிட பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் அனில் மேஷ்ராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து அவர் நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.
மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான அமர்குஷ்வாஸா, வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் இதில் கலந்து கொண்டனர்.
அப்போது அவர் இன்று (ஞாயிறு) மற்றும் வருகிற 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அலுவலர்கள் மேற்குறிப்பிட்ட சிறப்பு திருத்த முகாம்கள் பற்றிய விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி சிறப்பு திருத்தப் பணியினை சிறப்பாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, நல்லதம்பி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேசர், வருவாய் கோட்டாச்சியர் லட்சுமி, பிரேமலதா, தனிதாசில்தார் (தேர்தல்) மோகன் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.